Categories
மாநில செய்திகள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்…. தேர்வு முடிவுகள் வெளியீடு….. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டி தேர்வின் முடிவுகள் கடந்த திங்கட்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள்,உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு கணினி வழியாக கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

மொத்தம் 17 பாடப்பிரிவுகளில் நடைபெற்ற இந்த தேர்வை 2,13,859 பேர் எழுதினர். இந்த நிலையில் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் நேற்று வெளியிடப்பட்டது.

Categories

Tech |