Categories
அரசியல்

முதுநிலை மருத்துவ படிப்பு…. கலந்தாய்வுக்கான கட் ஆப் குறைப்பு…. இதோ முழு விபரம்…..!!!!

புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளிலுள்ள எம்.டி., எம்.எஸ் ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இடங்கள் சென்டாக் வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. முன்பே 2-ஆம் கட்ட கலந்தாய்வு மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்ற மாணவர்கள் கடந்த மாதம் 12ஆம் தேதிக்குள் கல்லூரியில் சென்று சேர்ந்தனர்.

இதனிடையே மத்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நீட் நுழைவுத் தேர்வில் பொதுப்பிரிவினர் 35 % (247 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம். இதேபோன்று எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 25% (210 மதிப்பெண்கள்) பெற்றால் விண்ணப்பிக்கலாம்.

அதன்பின் முன்பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகள் 30 % (229 மதிப்பெண்கள்) பெற்றால் போதுமானது என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்டாக் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து சென்டாக் இணையதளத்தில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும். இந்த தகவலை சென்டாக் கன்வீனர் ருத்ரகவுடு தெரிவித்து உள்ளார்.

Categories

Tech |