Categories
தேசிய செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு….. வெளியான தரவரிசை பட்டியல்…..!!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நீட் தேர்வு மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 1,527 பேரும் மற்றும் முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு 225 பேரும் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1ஆம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த 21ம் தேதி வரை சென்சாக இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விரைவில் நீட் தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கிட அடிப்படையில் சென்டாக் மூலம் மாணவர்கள் இட ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் புதுச்சேரியில் இருந்து முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தரவரிசை பட்டியல் புதுச்சேரி சுகாதாரத்துறையிடம் தேசிய தேர்வு முகமை வழங்கியது. இந்த தரவரிசை பட்டியல் தற்போது சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான (எம்.டி., எம்.எஸ்.) தரவரிசை பட்டியலில் 1,527 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் மாணவி நந்திதா 800-க்கு 648 மதிப்பெண் எடுத்து புதுச்சேரி மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். அனிர்பன் டேப் 646 மதிப்பெண் எடுத்து 2-வது இடத்தையும், விக்னேஷ் 645 மதிப்பெண் எடுத்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான (எம்.டி.எஸ்.) தரவரிசை பட்டியலில் 255 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஞானசூர்யா என்ற மாணவி 960-க்கு 681 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் தீபக் 669 மதிப்பெண் எடுத்து 2-வது இடத்தையும், மாணவி மோகன கவுரி 658 மதிப்பெண் எடுத்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Categories

Tech |