Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“முதுமலை-மசினகுடி” புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை-மசினகுடி செல்லும் சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதாவது முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மான்கள், காட்டெருமைகள் போன்றவைகள் உணவு தேடி அலைகிறது. இதன் காரணமாக மசினகுடி-முதுமலை சாலையில் செல்கின்றது. இந்த வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக புலிகளும் அந்த பாதையில் செல்கிறது. இந்நிலையில் சில  தினங்களுக்கு முன்பு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மானை ஒரு புலி  தூக்கிச்சென்றது.

இதைப்பார்த்து பொதுமக்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து ஒரு புலி உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு சாலையைக் கடந்து சென்றுள்ளது. இதைப்பார்த்த  ஜீப் ஓட்டுநர் தூரமாக வண்டியை நிறுத்தியுள்ளார். அதன்பிறகு புலி சாலையை கடந்து சென்றதும், ஜீப்பை ஓட்டிச் சென்றுள்ளார். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த பகுதிகளில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் எனவும், சாலையோரங்களில் வாகனங்களை  நிறுத்தக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |