கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் திரையில் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படத்தை வேல் ஃபிலிம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் பாடல்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்தது என்று தான் கூற வேண்டும். மேலும் கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணி என்றவுடன் காதல் படமாக தான் இருக்கும் என கணித்த ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது.
அதாவது ஒரு அப்பாவி இளைஞனான முத்து மும்பை டானாக மாறுவதுதான் இந்த படத்தின் கதைக்களம் தனது உடலை வருத்தி எடையை குறைத்து 20 வயது இளைஞனான சிம்பு நடித்திருந்தது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் சிம்புவின் நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த பாடத்தில் ஒரு பாடல் காட்சியில் லிப்லாக் பெறுவது போல அமைத்திருந்தாரம் கௌதம் மேனன். ஆனால் சிம்பு முத்தக்காட்சி வேண்டாம் என கூறிவிட்டாராம் அதன் பின் அந்த காட்சியை சீட் செய்து எடுத்தாராம் கௌதம் மேனன். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.