Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“முத்தக் காட்சி என்ன படுக்கையறை காட்சியில் கூட நடிப்பேன்”… பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!

நடிகை ராஷி கன்னா முத்த காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் நடிப்பேன் என பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகை ராஷி கன்னா இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.‌ அதன் பின்னர் இவர் தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவர் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார்.

இவர் தமிழில் அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷுடன் தற்போது திருச்சிற்றம்பலம் கார்த்தியுடன் சர்தார் மேதாவி மற்றும் சைதான் கா பச்சா  உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ராஷி கன்னா கூறியதாவது, “இளம் வயதிலேயே காதல் தோல்வியை சந்தித்து விட்டேன். இதனால் நான் துவண்டு விடவில்லை. காதலை வெறுக்கவும் இல்லை. மீண்டும் காதலிப்பேன். நிச்சயம் காதல் திருமணம்தான் செய்துகொள்வேன். நகைச்சுவை மற்றும் சண்டைக் காட்சிகளை போன்றுதான் முத்தக் காட்சியும். நடிக்க வந்த பிறகு முத்தக்காட்சி என்ன படுக்கையறை காட்சி என எல்லாவற்றிலும் நடித்து ரசிகர்களை ஹாப்பி ஆக்குவேன்” என பேசியுள்ளார்.

Categories

Tech |