யானைக் குட்டிகள் இரண்டு முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்படும் வீடியோக்களில் அதிகம் நாய், பூனை, பறவை, யானை போன்ற விலங்குகள் சேட்டை செய்யும் வீடியோக்கள் தான். அப்படி இரண்டு யானைகளின் அழகான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது. 19 நொடிகள் மட்டும் ஓடும் இந்த வீடியோவில் இரண்டு குட்டி யானைகள் தங்களது தும்பிக்கையால் முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.
https://twitter.com/SheldrickTrust/status/1444572965153218563
யானைகளின் தந்தங்கள் மனிதனின் விரலை விட மிகவும் மென்மையானது. சுமார் ஒரு லட்சம் தசைகளால் ஆனா தும்பிக்கைகளை கொண்டு ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளும். அந்த வகையில் ஒரு குட்டியானை இன்னொரு குட்டி யானைக்கு முத்தம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் உள்ள அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.