காரிப்பட்டி அருகே ஒற்றை குரங்கிடம் மாட்டிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அருகே உள்ள சாலை மறைகுலம் என்ற கிராமத்தில் ஒற்றை குரங்கு ஒன்று ஊரில் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த குரங்கு தெருவில் செல்லும் அனைவரையும் துரத்தி அடித்து வருவதாகவும், அது தற்போது வரை 15க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறிய தாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். அதனால் அப்பகுதியினர் மற்றும் நாய்களும் அந்த குரங்கை பார்த்து அலறியடித்து ஓடுவார்கள். குரங்கை பிடிக்க வனத்துறையினர் வைத்து கிராமத்தினர் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை.
இந்நிலையில் அக்கிராமத்தின் பள்ளி சுவரின் மீது அமர்ந்திருந்த 10 வயது சிறுவன் பாரதி அருகில் திடீரென்று குரங்கு வந்துள்ளது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த சிறுவன் அப்படியே சிலை போல் அமர்ந்துள்ளார். இருந்தாலும் அந்த குரங்கு சிறுவனை விடாமல் 7 நிமிடங்கள் வரை சிறுவனை அசைத்து முத்தம் கொடுத்தும் பலவிதங்களில் சிறுவனை அசைக்க முயற்சி செய்தது.
ஆனால் சிறுவன் ஒருவனின் சேட்டைக்கு பிடிகொடுக்காமல் சிலை போல் அமர்ந்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து குரங்கு அங்கிருந்து தானாகவே சென்று விட்டது. இதனையடுத்து சிறுவன் குரங்கிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதனைபார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.