கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த நாள் பெண்களின் உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று முழுவதும் இந்த தினம் விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஸ்மிரிதி இரானி, பூபிந்தர் யாதவ் ஆகியோர், முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முஸ்லிம் பெண்கள் பலரும் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினர்.