Categories
ஆன்மிகம் கோவில்கள்

முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5- ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா சிறப்பாக தொடங்கியது. நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன் தேரில் அமர்ந்திருந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்

Categories

Tech |