புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 75 வழக்குகளில் கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி முத்திரைத்தாள்கள் சமர்ப்பித்து மோசடி நடைபெற்றது குறித்து மாவட்ட நீதிமன்றம் நிர்வாக அதிகாரி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற சிலுடன் கூடிய முத்திரைதாள் மூலமாக வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த வருடம் 75 வழக்குகளில் முத்திரைத்தாள்கள் போலியாக ஜெராக்ஸ் கொடுத்து நீதிமன்ற சிலுடன் வழக்கு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது.
இதன்முலம் 27 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி நடைபெற்றதாக நீதிமன்றம் அதிகாரி தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்ற முதன்மை நிர்வாக அதிகாரி பால்ராஜ் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.