Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முத்திரையிட படாத 36 எடை அளவுகள் பறிமுதல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!!

நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர், உதவி ஆணையர்  க.திருவள்ளுவன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் ஆறுமுகம், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், சி.ஹெர்மஸ் மஸ்கரனாஸ்  ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல் பொருட்கள் விதிகளின் தராசுகள் முத்திரையிடப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் இந்த ஆய்வு குழுவினர் கூட்டாய்வு  செய்துள்ளனர்.

அப்போது உரிய முறையில் மறுபரிசீலனை செய்து முத்திரையிடாத மற்றும் எடையளவுகளில் வேறுபாடு கொண்ட 36 எடைக்கற்கள், மின்னணு தராசுகள், இதர எடை அளவு கருவிகள் மற்றும் ஊற்றல் அளவைகள்  பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதே போல் முறையாக விவரக் குறிப்புகள் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொட்டல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து கடைகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவியாளர் திருவள்ளுவன் கூறியதாவது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. எடை அளவு கருவிகளுக்கு உரிய சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு சான்று பெறாத நிறுவனங்கள் மீது சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார்களை தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் 0461-2340443 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என  கூறியுள்ளார்.

Categories

Tech |