பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறைப் பணியாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், விசாரணையின் முடிவில் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முத்துமனோ குடும்பத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.