முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் அறுபதாவது குருபூஜை விழா பசும்பொன்னில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வழங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகின்றேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு உட்பட நமது தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறுகின்றேன் என பிரதமர் பதிவிட்டு இருக்கிறார்.
Categories