Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

முத்து மாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா…. முளைப்பாரி எடுத்து வழிபட்ட பெண்கள்……!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி உப்புக்கார தெருவில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழாவின் 7-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலில் வைத்து பெண்கள் அம்மனை வழிபாடு செய்தனர். முன்னதாக முளைப்பாரி மன்னார்குடி திருப்பாற்கடல் தெரு குளக்கரையில் இருந்து ஊர்வலமாக காந்தி ரோடு, கடைத்தெரு வழியாக கோவிலை அடைந்தது. பின்னர் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Categories

Tech |