தமிழ் கடவுள் என்று நாம் போற்றி வணங்குவது முருக பெருமானை தான். பல அரக்கர்களை வதம் செய்து தேவர்களையும், மக்களையும் காப்பாற்றிய பல புராணங்களை நாம் அறிவோம். தன் பக்தர் ஒருவரை காப்பாற்றி அவர் மூலம் தன்னை பற்றி புகழ்ந்து பாட வைத்த ஒரு புராணத்தை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம்.
திருவண்ணாமலையில் தன் வாழ்க்கையை வெறுத்து தன் உயிரை போக்கி கொள்ள இருந்த அருணகிரிநாதரை முருகர் காப்பாற்றி அவர் அடிஎடுத்து கொடுக்க “முத்தைத்தரு” என துவங்கும் திருப்புகழை பாடினார் அருணகிரியார். ஒரு முறை முருகனை தரிசனம் செய்த போது, “வயலுக்கு வா” என்ற அசரீரி ஒலித்தது. அங்கு சென்றால் முருகர் காட்சி தரவில்லை. அப்போது விநாயகர் அவர் முன் தோன்றி அசரீரி உண்மையே என்று கூறி, அங்கிருந்த சுப்ரமணியரை காட்டினார். முருகர் தன் வேலால் அருணகிரிநாதரின் நாவில் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார்.
அதன் பின் முருகனை போற்றி அவர் 18 பாடல்கள் பாடினார். பல முருக தளங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடினார். அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்து துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள காலையில் சிறப்பிடம் பெறலாம். முருக பக்தரான கிருபானந்த வாரியார், 1934ஆம் ஆண்டில் இக்கோவிலுக்கு வந்தார். அப்பொழுது அர்ச்சகருக்கு ஐம்பது பைசா காணிக்கையை கொடுத்தார்.
அன்று இரவு கோவில் நிர்வாகி ஒருவரின் கனவில் சந்நியாசி வடிவில் தோன்றிய முருகன் “ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயோ” அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?” என்று கேட்டார். மறுநாள் வந்து விசாரித்த போது அர்ச்சகர் ஐம்பது பைசா பெற்றது தெரிந்தது. அதை உடனே வாரியாருக்கு உடனே திரும்ப அனுப்பிவைத்தனர். அதன் பின் இங்கு வந்த வாரியார், நடந்ததை அறிந்து கோபுரம் கட்டி கும்பாவிஷேகம் செய்வித்தார். வயலூரை பற்றி தமிழ் மக்கள் அறியும் படி செய்தவர் வாரியார்.
மூலஸ்தானத்தில் முருகன் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்க்கு தேவமையில் என்று பெயர். ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருக்கும். முருக பெருமானே நம் வேலினால் குத்தி உண்டாகிய சக்தி தீர்த்தம் இக்கோவில் வெளியே உள்ளது. வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும் கோலத்தில் காட்சி தரும் நடராஜரை, இங்கு இங்கு காலை தூக்காத கோலத்தில் தரிசிக்கலாம். இது நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். இவரது சடா முடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. இவருக்கு “சதுர தாண்ட நடராஜர்” என்று பெயர்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நமக்கு புகட்ட அன்றாடம் தாய் தந்தையாரின் காலில் பணிந்து அருள் பெற்ற பாலகராய் காட்சி அளிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. இக்கோவிலை தரிசிக்க பக்தர்கள் காலை 6 முதல் 1 வரையும் மாலை 3.30 முதல் 9 வரை செல்லலாம்.