Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி தோப்பில் அதிமுக பிரமுகர் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…?? போலீஸ் விசாரணை…!!!

அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிருப்பு மேற்கு தெருவில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதிமுக பிரமுகரான கோவிந்தராசு(48) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் கோவிந்தராசு சடலமாக கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோவிந்தராசுவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து கோவிந்தராஜனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிந்தராசுவை யாரேனும் கொலை செய்து சடலத்தை தோப்பில் வீசி சென்றனரா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்ட உயிரிழந்தாரா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |