முந்திரி தோப்பில் படுத்துறங்கிய ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் கொளஞ்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இதனால் கொளஞ்சி மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவரின் பெயர் ரவுடி பட்டியில் இருப்பதால் போலீசார் இவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கொளஞ்சி இரவு நேரத்தில் ஒரு முந்திரி தோப்பில் உள்ள கட்டிலில் படுத்து உறங்கி உள்ளார். இந்த முந்திரி தோப்பை தர்மராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் காவலுக்காக முந்திரி தோப்பிற்கு சென்ற தர்மராஜ் அங்கு கட்டிலின் மீது யாரோ ஒரு மர்ம நபர் உறங்கிக் கொண்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பிறகு அவர் கொளஞ்சியை எழுப்ப முயற்சி செய்ய கொளஞ்சி எழுந்திருக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து தர்ம ராஜ் இடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் தர்மராஜ் தனது உறவினர்களான லோகேஸ்வரன், பிரபாகரன், சக்திவேல் ஆகியோரை அழைத்து உள்ளார். அவர்கள் 3 பேரையும் பார்த்த கொளஞ்சி பயந்து ஓடி ஒளிந்துள்ளார். ஆனால் அவர்கள் கொளஞ்சியை விடாமல் தேடி பிடித்து விட்டார்கள். இதில் கோபமடைந்த கொளஞ்சி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தர்மராஜை வெட்டியுள்ளார்.இதைப் பார்த்த லோகேஸ்வரன், பிரபாகரன், மற்றும் சக்திவேல் ஆகியோர் இணைந்து கொளஞ்சியை தாக்கியுள்ளனர். அதில் கொளஞ்சி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் காயமடைந்த தர்மராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொளஞ்சியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்மராஜ் , லோகேஸ்வரன், பிரபாகரன், சக்திவேல், ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வாறு முந்திரி தோப்பில் ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.