Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி விவசாயியிடம் “70 3/4 லட்ச ரூபாய்” மோசடி…. மகனின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செடுத்தான் குப்பம் கிழக்கு தெருவில் முந்திரி விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு ராஜா என்ற மகன் உள்ளார். இவர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நெய்வேலி 20-வது வட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் டவுன்ஷிப் மெயின் பஜாரில் நகை கடை வைத்துள்ளார். அவரது தந்தையும், எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில் எனது தந்தையிடம் நீங்கள் பெரிய அளவில் பணம் கொடுத்தால் தங்கத்தில் முதலீடு செய்து 2 ஆண்டுகளில் அதனை இரட்டிப்பாக்கி தருவேன் என இளங்கோவன் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் தங்கம் வாங்கி சுங்கத்துறைக்கு வரி கட்டாமல் அதிக லாபத்திற்கு அதனை விற்று பணத்தை இரட்டிப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி எனது தந்தை கடந்த 2010-ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளாக 70 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாயை இளங்கோவனிடம் கொடுத்து ரசீது வாங்கி கொண்டார். கடந்த 2011- ஆம் ஆண்டு எனது தந்தை இறந்துவிட்டார்.

அதன் பிறகு பணத்தை கேட்ட போது இளங்கோவன் வெவ்வேறு காரணங்களை கூறி ஏமாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இளங்கோவனின் வீட்டிற்கு சென்று கேட்டபோது பணத்தை தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்தார். எனவே இளங்கோவன், அவருக்கு உடந்தையாக இருந்த ராஜலஷ்மி, அருண்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |