காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பிரபு தனது நண்பர்களான மனிஷ், சையது, லுகேஸ்வரன் ஆகியோருடன் காரில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர் அருகே மற்றொரு காரை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்களும் மோதியது.
அப்போது பிரபு ஓட்டி வந்த கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கியது. மற்றொரு கார் மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பிரபுக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டது. மற்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.