Categories
தேசிய செய்திகள்

முனைப்புடன் செயல்படும் இந்திய விமானப்படை…. மத்திய அரசு பெருமிதம்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான நிவாரண பொருட்களை பல்வேறு நாடுகளும் வழங்கி வருகின்றன.அது மட்டுமன்றி முக்கிய பிரபலங்கள் அனைவரும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதனையடுத்து இந்திய விமானப்படையின் ஐ எல் 76 விமானம் ஜகர்த்தாவில் இருந்து ஆக்சிஜன் கொள்கலன்களை எடுத்து வந்தது. பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் பல நகரங்களுக்கு இடையேயும் ஆக்சிடெண்ட் இந்திய விமானப்படை முனைப்புடன் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Categories

Tech |