கொரோனா முன்கள பணியாளர்களுக்காக பிரதம மந்திரி கரீப் கல்யாண் தொகுப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 19ம் தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்கு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன் களப்பணியாளர்கள் குடும்பத்தினர் அல்லது அவர்களுடைய உறவினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு பெறுவதற்கான கடைசி தேதி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலமாக 2.12 லட்சம் குடும்பங்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்கிறது. கொரோனா காலத்தில் பணிபுரிந்த முன்கள பணியாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கிறது. இதுவரை இறந்துபோன முன் களப்பணியாளர்களை சார்ந்திருந்த 1905 குடும்பங்கள் இன்சுரன்ஸ் கிளைம் செய்துள்ளனர்.