சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் இந்த அரசுக்கு இருப்பதாக தெரிவித்தார்.
சென்னையில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்தாய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், வரலாறு காணாத மழை பெய்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறைவாக இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகள் தான் காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் இந்த அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். ஒமைக்ரான் வைரஸ் மழை பாதிப்புகள் மிரட்ட தொடங்கியுள்ள நிலையில், முன்கள பணியாளராக தானும் களத்தில் நிற்கிறேன் எனவும் கூறினார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.