Categories
பல்சுவை

முன்ஜென்மத்தில் நீங்கள் யார் ? கண்டுபிடிக்கலாம் ஈஸியாக ….!!

உங்கள் பிறந்த தேதியில் வரும் எண்ணை வைத்து முன்ஜென்மத்தில் உங்களது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

அனைவருக்கும் முன் ஜென்மத்தில் நாம் எப்படி இருந்திருப்போம் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும் அதற்கான வழி இங்கு.

எண் 1

மற்றவர்களை மகிழ்விக்க தியாகம் செய்பவராக இருந்திருப்பீர்கள். சுயமரியாதையும் சுயமதிப்பு உங்களுக்கு முன் ஜென்மத்தில் குறைவாகவே இருந்திருக்கும். இந்த ஜென்மத்தில் அதனை உணர வேண்டிய நேரம் இது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எண் 2

முன்ஜென்மத்தில் பொருளைத் தேடி அலையும் சூழலில் இருந்திருப்பீர்கள். முழு வாழ்வையும் பணம் பொருள் போன்றவற்றை தேடி ஓடிக் கொண்டு இருந்தீர்கள். இந்த ஜென்மத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கும் காலத்தை வாழுங்கள்.

எண் 3 

பயம், அசௌகரியம், சுயமதிப்பு குறைவு போன்றவை முன்ஜென்மத்தில் இருந்திருக்கும். அடக்குமுறையினால் தனித்துவமான தன்மையை வெளிக்காட்ட முடியாமல் இருந்திருப்பீர்கள்.

எண் 4

குடும்பத்தில் சந்தோஷம் இல்லாமல் இருந்திருப்பீர்கள். சிலர் பெற்றோர் இல்லாமல் கைவிடப்பட்ட அனாதையாகவும் இருந்திருக்கக் கூடும். எனவே போன ஜென்மத்தில் இழந்த சந்தோஷத்தை இந்த ஜென்மத்தில் பெற முயலுங்கள்.

எண் 5

முன் ஜென்மத்தில் சுயநலவாதியாகவும் தேவைக்கேற்ப செயல்படுபவராகவும் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு தேவைபடுவதை செய்யவில்லை என்றால் நீங்கள் அவர்களை மதிப்பதில்லை. இந்த ஜென்மத்தில் பிறருக்காக வாழுங்கள்.

எண் 6

முன்ஜென்மத்தில் மனநலக் கோளாறு அல்லது உடல்நலக் கோளாறு போன்றவற்றால்  துயரப்பட்டு இருப்பீர்கள். வாழ்நாள் முழுவதும் கைவிடப்பட்ட நிலையில் காலங்கள் கழித்திருப்பீர்கள். அன்பு கிடைக்குமா என்று ஏங்கி இருப்பீர்கள்.

எண் 7

மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக போராட்டமே நிகழ்ந்திருக்கும். சுதந்திரத்தை தேடியும் பெயரை நிலை நிறுத்தவும் ஓடிக்கொண்டே இருந்திருப்பீர்கள்.

எண் 8

முன்ஜென்மத்தில் உங்களது பொறுப்புக்களை தட்டில் விட்டிருப்பீர்கள் இந்த ஜென்மத்திலும் முற்காலத்திலும் அது தொடர்ந்து இருக்கும். சாதிக்க வேண்டும் என்பதை விட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்கு நீங்கள் அதிகம் விரும்புவீர்கள்.

எண் 9

முந்தைய ஜென்மத்தில் உங்களுக்கு நன்மை நடக்கவில்லை. ஆனால் இந்த ஜென்மம் உங்களுக்கு மிக மிக அழகானது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |