Categories
இந்திய சினிமா சினிமா

முன்னணி இயக்குனரால் கர்ப்பம்….. பிரபல நடிகை சொன்ன பகீர் சம்பவம்….!!!!

ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான மந்தனா கரீமி,  பாக் ஜானி, ராய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஈரான் நாட்டைச் சேர்ந்தவரான இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடமும் பிடித்திருந்தார். மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கவுரவ் குப்தா என்பவரை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் நடத்தும் லாக்கப் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். அதில் எபிசோட் ஒன்றில் உங்களிடம் உள்ள ஒரு ரகசியம் பற்றி கூறுங்கள் என கேட்டபோது, அந்த நிகழ்ச்சியில் வெளியேற்றுதல் சுற்றில் இருந்து தப்பிப்பதற்காக தனது வாழ்க்கையின் மிகப் பெரிய ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் முன்னணி இயக்குனர் ஒருவருடன் ரகசிய உறவு பற்றி கூறினார். அவர் கூறும்போது எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு ஒரு சில மாதங்களிலேயே வலுப்பெற்றது.  ஆனால் இதனை வெளியில் யாருக்கும் கூறாமல் ரகசியம் காப்பது என்று இருவரும் முடிவு செய்தோம். அதைத்தொடர்ந்து முன்னாள் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக பொறுத்திருந்தேன். இதன்பின் கர்ப்பமடைந்தேன். இதனை தனது காதலனான அந்த இயக்குனரிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இந்த பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மனதிலும், உணர்வுரீதியாகவும் நான் இன்னும் தயாராகவில்லை என்று கூறினார். இதனால், வேறு வழியின்றி மந்தனா கருக்கலைப்பு செய்யும் முடிவுக்கு சென்றுள்ளார். இதைக் கூறும்போது மந்தனா, சக போட்டியாளர்கள் மட்டுமின்றி நடிகை கங்கனா ரணாவத்தும் கண்கலங்கினார்.

Categories

Tech |