Categories
உலக செய்திகள்

முன்னணி நாடாக விளங்கும் இந்தியா… எதில் தெரியுமா..? ரஷ்ய வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!!

பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தியா இருக்கிறது என நினைப்பதாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கேவ் லாவ்ரோவ் கூறியுள்ளார். ஏனென்றால் மற்ற  நாடுகளை விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். மேலும் பல்வேறு விதமான விவகாரங்களில் தீர்வு காண்பதில் ராஜதந்திர அனுபவம் வாய்ந்த நாடாக அங்கீகாரம் பெற்று தனது பகுதியில் தனக்கென இந்தியா ஒரு மதிப்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா ஐ.நா-வில் ஈடுபாட்டுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

தெற்காசியாவில் பல்வேறு ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு பணியையும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் சர்வதேச செயல்பாட்டாளர்களாக இருக்கின்றனர். அவர்களை ஐ.நா கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக கணக்கில் கொள்ள வேண்டும் என ரஷ்ய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலும் லாவ்ரோவ் கடந்த செப்டம்பரில் 77 -வது ஐ.நா பொது சபை கூட்டத்தில் பேசிய போது, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்காவை சேர்ந்த நாடுகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்கப்பட்டால் ஜனநாயகம் நிறைந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |