Categories
தேசிய செய்திகள்

முன்னறிவிப்பு இல்லாமல் பேருந்து கட்டணம் 3 ரூபாய் அதிகரிப்பு… பொதுமக்கள் அதிர்ச்சி…..!!!!

கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் புதுவையில் கடந்த மே மாதமே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் புதுவையில் அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. தனியார் பஸ்கள் இயக்கப் படாமல் இருந்தது. ஜூலை மாதம் பிற்பகுதியில் புதுவைக்கு தமிழக அரசு பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு பஸ்கள் புதுவைக்கு ஜூலை மூன்றாவது வாரத்தில் வர தொடங்கியது. அதேபோல புதுவையில் தனியார் நகர பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் புதுச்சேரி தனியார் பேருந்துகள் முறையான முன்னறிவிப்பு இல்லாமல் ரூ.3 அதிகரித்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்ற மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது, அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியும், இன்றளவும் தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories

Tech |