அமெரிக்கநாட்டின் முன்னாள் அதிபரான டிரம்ப், தன் பதவிஏற்பு விழாவுக்காக கிடைத்த லாப நோக்கமற்ற நிதியை தன்னுடைய குடும்பத்தை வளப்படுத்த செலவு செய்தாக தற்போதைய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் குற்றம்சாட்டியது. இது குறித்து வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. எனினும் டிரம்ப் தரப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்துவந்தது.
இந்நிலையில் லாப நோக்கமற்ற நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்திய இவ்வழக்கை முடித்து வைக்க 7,50,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.5 கோடியே 72 லட்சம்) இழப்பீடாக வழங்குவதாக டிரம்பின் ஜனாதிபதி பதவியேற்பு குழு அறிவித்து இருக்கிறது. இத்தகவலை உறுதிப்படுத்தி இருக்கும் வாஷிங்டன் அட்டார்னி ஜெனரல் கார்ல் ரேசின் டிரம்ப் தரப்பிடமிருந்து பெறப்படும் தொகை வாஷிங்டனில் செயல்படும் லாப நோக்கமற்ற 2 நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.