முன்னாள் அதிபரின் வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
அமெரிக்க நாட்டில் முன்னாள் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்தார். இவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் போது அரசுக்கு சொந்தமான சில ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ட்ரம்ப் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அந்த சோதனையின் போது 11 பெட்டிகளில் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக FBI அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டிரம்ப் தன்னுடைய வீட்டில் எந்த ஒரு ரகசிய ஆவணங்கள் இல்லை என்றும் வருகிற தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்பதற்காக நடக்கிற சூழ்ச்சி என்றும் கூறியுள்ளார். அதோடு அமெரிக்க நீதித்துறையை எதிர்த்து ஃப்ளோரிடோ நீதிமன்றத்தில் ட்ரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ரகசிய ஆவணங்களை சோதனை செய்யக் கூடாது எனவும் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.