Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சரிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு… நடிகை வழக்கு…!!!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கடந்த 20ம் தேதி கைது செய்தனர். அவருக்கு சென்னை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் தனக்கு பத்து கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் இருந்துகொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்ற காரணத்தினால், எனக்கு மாதாந்திர தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்னை ஏற்பட்டால் இழப்பீடு கோரும் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த வழக்கில் மாத செலவுகள், மருத்துவச் செலவு, வாடகை போன்றவற்றிற்கு இடைக்கால தொகையாக 2.50 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |