Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை…? பெரும் பரபரப்பு..தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன் போன்றோர் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வீட்டில் தனி அறையில் படுத்து உள்ளார். நேற்று காலையில் வழக்கமான நேரத்தில் அவர் எழுந்திருக்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி அவர் படுத்திருந்த அறை கதவை தட்டியுள்ளார். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சரவணனின் சகோதரர் கர்ணன் வந்து கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது அறையில் சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இது பற்றி உடனடியாக கருப்பாயூரணி போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் சரவணன் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |