காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமையாத்திரை நாளை மகாராஷ்டிரா மாநில எல்லையை அடைகின்றது. அங்கு நான் டெட்மாவட்டத்தில் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்டத்தில் பொறுப்பு வகிக்கும் முன்னால் அமைச்சர் மந்திரி ஆரிப் நசீம் கான்,காங்கிரஸ் முக்கிய நிர்வாகியான எச்.கே.பாட்டீல் இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் பணிகளை பார்வையிடுவதற்காக ஆரிப் நாசிம் கான் அந்தப் பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.அங்குள்ள சுங்கச்சாவடியை அடைந்தபோது எதிர்பாராத விதமாக கார் மீது மற்றொரு வாகன மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.