அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசாலை அருகே அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இன்னிலையில் கீழ்நாத்தூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த அதிமுக நிர்வாகிகள் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றியுள்ளனர். இந்த நிகழ்வால் போராட்டம் நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.