Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரிலீஸ்….!! செம குஷியான அதிமுக தொண்டர்கள்…!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் இருக்கும் அவருடைய சகோதரர் மகேஷ் குமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக மகேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தன்னுடைய மருமகனான நவீன் குமாருக்கும் அவருடைய சகோதரர் மகேஷ் குமாருக்கும் இடையில் மீன்பிடி வலை தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேண்டுமென்றே இவ்வாறு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதோடு முன்னாள் அமைச்சராக இருந்த தன்னுடைய நற்பெயருக்கு ஊறு விளைவிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் மகேஷ்குமார் இவ்வாறு செய்துள்ளார் எனவும், அவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் பழிவாங்கும் நோக்கில் ஜெயகுமார் மீது இவ்வாறாக குற்றம் சாட்டியுள்ளார் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, நிபந்தனை அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கியுள்ளார். அதன்படி தற்போது ஜெயக்குமார் தங்கியுள்ள திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். எனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விரைந்து விடுதலை செய்யப்படுவார் என்ற செய்தி கேட்டு அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |