Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று …!!

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் தற்போது சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரை கொரோனா என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், முக்கிய பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக அதிமுகவை பொறுத்தவரை அமைச்சர் உட்பட 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |