மறைந்த தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் போன்றோரை பற்றி இழிவாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது பொதுக் கூட்டத்தில் பேசிய வீடியோவுடன் இணைத்து கட்டெறும்பு பிஜேபி என்ற டுவிட்டர் கணக்கு பரப்பி வந்துள்ளது. இப்பதிவை கண்டு கடுப்பான திமுக-வினர் காவல் நிலையத்தில் புகாரளித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை அசோக் நகர் சைபர் கிரைம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மணப்பாறை காவல் நிலையத்தில் அரசு வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவர் அவதூறாக பேசியுள்ளார் என்றும் அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாகவும் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.