ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து தலைமறைவான அவரை கைது செய்வதற்காக டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. இதையடுத்து, தனக்கு முன் ஜாமீன் வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மீதான மனு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமனறத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்கள் தரப்பை கேட்காமல் முன்ஜாமீன் மீதான மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்ககூடாது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.