Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பு….. அ.தி.மு.க நிர்வாகிகள் இருவர் கைது…!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பால்வளத்துறை அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதுவரை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இருப்பினும் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி உதவியாக இருந்த சில அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அதன்படி திருப்பத்துார் மாவட்டம்,  சேர்ந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறை நகரச் செயலாளர் ஏழுமலை மற்றும்  விக்கி (எ) விக்னேஸ்வரன் ஆகிய இருவரையும் திருப்பத்துார் டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்து விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் 2 பேரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |