சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக். இவர் மும்பையில் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் உணவகங்களில் இருந்து மாதந்தோரும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தரவேண்டும் என்று அணில் தேஷ்முக் தன்னை வற்புறுத்தியதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் அணில் தேஷ்முக் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகின்ற நிலையில் அவரிடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி கடந்த 1ஆம் தேதி என்று அவரை கைது செய்தனர். இதையடுத்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அணில் தேஷ்முக்கை ஆஜர்படுத்தினர்.
மேலும் அணில் தேஷ்முக் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காத்ததால் அவரை விசாரிக்க வேண்டி உள்ளது.எனவே அதற்கு அனுமதி தர வேண்டுமென்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். இருதரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்ட பின்னர், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் அணில் தேஷ்முக்கை சிறையில் வைக்க உத்தரவிட்டார்.