Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவிக்கு 4 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல மாகாணம் கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வீட்டில் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஆலங்குடியில் ஊராட்சி தலைவியாக இருந்த ராணி என்பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது ராணி 300 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை கணபதி ராணியிடம் கொடுத்தபோது போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ராணியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ராணிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், 4 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |