சென்னையில் உள்ள புழுதிவாக்கம் ஜேக்கப் தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் நகராட்சி தலைவர். இவருடைய மூத்த மகன் ஜே.கே. மணிகண்டன். இவர் தற்போது சென்னை மாநகராட்சி 186 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவரது 2ஆவது மகன் ஜே.கே. பர்மன். இவர் முன்னாள் கவுன்சிலர். இந்நிலையில் பர்மன் கடந்த 28ஆம் தேதி காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சென்ற போது அவரை பின்தொடர்ந்து வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பர்மன் படுங்காயங்களோடு உயிர் தப்பினார். இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில், பர்மன் வீட்டின் அருகில் வசிக்கும் வேலாயுதம் மற்றும் அவருடைய மனைவி ஹேமாவதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை சம்மதானப்படுத்த சென்றுள்ளார். அப்போது அவருக்கும் ஹேமாவதி உறவினர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஹேமாவதியின் உறவினர்கள் பர்மனை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது. இந்நிலையில் திமுக புறமுகர் பர்மனை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டையை சேர்ந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.