உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், அவர் எழுதிய கடிதங்களையும் அவரின் முன்னாள் காதலி ஏலம் விட்டுள்ளார். அவற்றில் முன்னாள் காதலியுடன் எலான் மஸ்க் இருக்கும் புகைப்படங்கள் பெரிய தொகைக்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எலான்மஸ்கும் அவரது கல்லூரி கால முன்னாள் காதலியுமான ஜெனிஃபர் க்வென்னும் ஒன்றாக உள்ள புகைப்படங்களை, ஜெனிஃபர் அமெரிக்காவிலுள்ள ஏல மையத்தில் சமீபத்தில் ஏலம்விட்டார். அவற்றில் இருவரும் உள்ள ஒரு புகைப்படம் ரூபாய்.1.3 கோடிக்கு ஏலம் போனதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டசெய்தியில், பூஸ்டனில் இயங்கும் ஆர்ஆர் ஏல மையம், இதுவரையிலும் கண்டிடாத, மிகவும் நினைவில் இருக்கக்கூடிய ஜெனிஃபர் க்வென் – எலான் மஸ்கின் புகைப்படங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. சென்ற புதன்கிழமை எலான் மஸ்க், ஏலம் விடப்பட்ட புகைப்படங்களில் ஒன்றை தன் டுவிட்டர் பக்க புரொபைல் புகைப்படமாக வைத்திருந்தார். வளர்ப்பு மகனின் படிப்புசெலவுக்கு பணம் இல்லாததால், எலான்மஸ்கின் முன்னாள் காதலி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அவர் ஏலம்விட்ட புகைப்படமும், கடிதமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.