ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் கல்யாண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் 2 பேரும் டக்கிலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற இளம் பெண் விமலாவை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அந்தப் பெண் விமலாவிடம் நானும் கல்யாணும் உங்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பாக காதலித்து வந்தோம். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். இருப்பினும் பல இடங்களில் நான் கல்யாணை தேடி பார்த்தும் அவர் எனக்கு கிடைக்கவில்லை. என்னால் அவரை மறக்க முடியாததால் தான் நான் தேடி வந்தேன்.
எங்கள் 2 பேரையும் சேர்த்து வையுங்கள் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட விமலா அந்த பெண்ணை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு ஒரு வினோதமான முடிவினை விமலா எடுத்துள்ளார். அதாவது தன்னுடைய கணவருக்கு நித்ய ஸ்ரீயை திருமணம் செய்து வைப்பதற்கு விமலா முடிவு செய்துள்ளார். தன்னுடைய முடிவை பற்றி 2 பேரிடமும் கூறியுள்ளார். அதற்கு இருவரும் சம்மதித்ததால் திருப்பதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கல்யாணுக்கும் நித்யஸ்ரீக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு விமலா தலைமை தாங்கினார். மேலும் திருமணம் முடிந்த பிறகு 3 பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.