பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் ரூபாய் 90,000 மதிப்பு உள்ள ஒரு ஆடு திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் அந்த நாட்டின் லாகூர் நகரில் வசித்துவருகிறார். பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள சூழ்நிலையில், 6 ஆடுகளை கம்ரான்அக்மல் வீட்டினர் வாங்கி உள்ளனர். இந்த ஆடுகளை வீட்டின் வெளியில் உள்ள தொழுவத்தில் வைத்து அதனை பாதுகாத்து பராமரிக்க ஒரு உதவியாளரையும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அவரது வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கி வைத்த விலையுயர்ந்த ஆடு ஒன்றை திருடர்கள் களவாடிச் சென்று விட்டதாக கம்ரான் அக்மலின் தந்தை புகார் தெரிவித்து இருக்கிறார். இச்சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. அங்கு இருந்த 6 ஆடுகளில் ரூபாய் 90,000 மதிப்புள்ள விலையுயர்ந்த ஆட்டை திருடர்கள் தூக்கி சென்றுவிட்டதாக கம்ரான் அக்மலின் தந்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கம்ரான் அக்மல் கடந்த 2017 ம் வருடத்துடன் , தன் 15 வருட நீண்ட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற்று விட்டு பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.