Categories
மாநில செய்திகள்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க… சிபிசிஐடி பரிந்துரை…!!!

தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது அவரை காரில் ஏறச் சொன்ன உயர் அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பிரபல அதிகாரியின் கணவரான முன்னாள் டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது. விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த சம்பவத்திற்கு துணை போன மேலும் 4 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது,

Categories

Tech |