Categories
உலக செய்திகள்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபட்சே வெளிநாடு செல்லலாம்…. அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்….!!!

இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபட்சே  வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம்  அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே தான் காரணம் என கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கோத்தபய ராஜபக்சே  நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பியுள்ளார். இதனையடுத்து கோத்தபய ராஜபக்சே சகோதரர்களின் ஒருவரான முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபட்சே  நாட்டு மக்கள் போராட்டத்தை கண்டு தலைமறைவாக இருப்பதற்காக வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் முயற்சிகள் இருந்தார். ஆனால் தப்பி செல்ல முடியாததால் திட்டத்தை கை விட்டார். இந்நிலையில் அந்நாட்டு உயர்நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு  பசில் ராஜபட்சே மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |