முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 54,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தனக்கும் தன் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தேவ கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் என் மனைவி சென்னம்மாவும் நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே நாங்கள் தனிமைப்படுத்திகொண்டோம்.
கடந்த சில நாட்களாக எங்களுடம் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பதற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று தேவகவுடா அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.