இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தார். அப்பொழுது அந்த இடத்தில் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தை நடத்தினர். அப்பொழுது அங்கு பொதுமக்கள் அனைவரும் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர் , துரோகி’ என ஆக்ரோசமான கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசார் இம்ரான்கான் மற்றும் முன்னாள் மந்திரிகள் பலர் உள்பட 150 பேர் மீது வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கும் இம்ரான்கானுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தானின் உள்துறை மந்திரியான ராணா சனாவுல்லா கூறியுள்ளார்.