பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் வீட்டில் உளவு பார்க்க உதவிய காவலாளி பிடிபட்டார்.
பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வீட்டில் உளவு பார்க்க உதவிய காவலாளி பிடிபட்டார். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் வீடு அமைந்துள்ள பாணிகளா பகுதிக்கு உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இம்ரான்கான் வீட்டில் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் கண்காணிப்பு கேமராவை இம்ரான்கான் அறையில் வைக்கும் போது பிடிபட்டார்.
அந்தக் காவலாளியை இம்ரான்கானின் உதவியாளர்கள் தனியிடத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி தகவல்களை பெற்றதாக கூறப்படுகின்றது. பின்பு அந்தக் காவலாளியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த போலீசார் உயர் அதிகாரி ஒருவர் வீட்டில் பணியாற்றும் நபர்களின் விவரங்களை கொடுக்குமாறு இம்ரான்கானிடம் பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை என்றார். பணியாளர்கள் விவரம் கிடைத்தால் மட்டுமே விசாரணை செய்ய உதவியாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளார். மேலும் இம்ரான்கன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது கட்சித் தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.