Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் மகள்…. ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பா….? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன….?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் லண்டனிலுள்ள நெஸ்கோல் லிமிடெட் மற்றும் நெல்சன் எண்டர்பிரைசஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனங்கள் பார்க் லேனிலுள்ள அவென்பீட்ஸ் ஹவுசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த குடியிருப்புகள் சட்ட விரோதமாக வாங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை பணியகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு மரியம் நவாஸ் போலி பத்திரங்களை தயாரித்ததாகவும் அவரது கணவர் கேப்டன் சப்தார் அதில் கையெழுத்திட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வழக்கு தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நடைபெற்று வந்துள்ளது.

இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு மரியம் நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஆகஸ்டில் நவாஸ் ஷெரிப் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமினில் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவென்பீட்ஸ் ஹவுஸ் ஊழல் வழக்கிலிருந்து பிஎம்எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவரை விடுதலை செய்து இஸ்லாமியபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் மரியம் நவாஸ் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும்.

Categories

Tech |